அப்பா வரட்டும் சொல்றேன்

சின்னதாய் ஒரு மிரட்டல் அம்மாவுக்குத்தான்…!

 

உடனடியாய் பொய் பயம் காட்டி

குதூகலிக்கச் செய்வாள்

என்னையுந்தான்…!

 

மிரட்டலுக்குச் சங்கதம்

கிடைச்சதாய் எண்ணி

கொக்கரிக்கும் குட்டி மனசும்தான்

 

அடபோடி…

மாண்டவர் மீள்வாரா…

 

சத்தமில்லாமல் சிரிச்சது

மாலையிட்ட அப்பாவின்

படமும்தான் !

 

                          லொவிஷீனா இராமையா