தற்போது பள்ளிகளில் போதிக்கப்படும் கணிதம் Image result for Mathsவெறும் கணக்கிடும் வழிமுறைகளுக்கே அதிக முன்னுரிமை வழங்க வருகிறது. பிரச்சனை தீர்வு வழிமுறையிலான கணித வழிமுறைகளே திறன்மிக்க, சிந்திக்கும் மாணவர்களை உருவாக்கும் என்பதோடு அத்தகு மாணவர்களே 21 நூற்றாண்டுச் சவால்களை எதிர்க் கொள்ளும் திறனைப் பெற்றிருப்பார்கள் என்ற நோக்கிலேயே தமிழ் அறவாரியம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இருபது மாணவர்கள் கொண்ட ஒரு வட்டம் பள்ளிகளில் உருவாக்கப்பட்டு வாரம் ஒரு வகுப்பும் ஆண்டு இறுதியில் வட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிகள் தேசிய ரீதியில் ஒரு கணிதப் போட்டியில் கலந்து கொள்ளும் வண்ணமும் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்துலக நிலையில் நடைபெறும் ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கான ஆசிரியர் கையேடு, பெற்றோர் கையேடு கணித வட்டத்தை நடத்தும் வழிமுறை ஆகியவற்றைத் தமிழ் அறவாரியமே தயாரித்து வழங்குகிறது.

இவ்வாண்டு பரிட்சார்த்த முறையில் தொடங்கவிருக்கும் இராமானுஜன் கணித வட்டத்தில் சிலாங்கூர்/கோலாலும்பூரைச் சேர்ந்த 10 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொண்டுள்ளன. முதல் கட்டமாகக் கணித வட்ட ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி காஜாங்கில் உள்ள ஃபெரஸ்கோட் தங்கும்விடுதியில் கடந்த 22, 23 ஏப்ரல் தேதிகளில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியை மலேசியாவைப் பிரதிநிதித்து அனைத்துலக ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட ஒரே இந்தியரும் தற்போது கணிதப் பயிற்றுனராக இருப்பவருமான திரு.ஜோனதன் இராமச்சந்திரன் நடத்தினார்.

வரும் ஜூன் மாதம் முதல் இராமானுஜன் கணித வட்ட வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.