மலேசியத் முனை. நா. கண்ணன்தமிழ் அறவாரியம் அடுத்த நகர்வை நோக்கி அடியெடுத்து வைக்கும் பொருட்டு இயக்கங்களோடு இணைந்து சேவையாற்றவும் முனைப்பு காட்டுகிறது. இந்த முனைப்பின் விளைவாகத் தமிழ் அறவாரியம் தன் ஈராண்டுப் பொதுக்கூட்டத்தில் முதல் முறையாகச் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது.

கடந்த 29.4.2017 காரிக்கிழமையன்று காலை 9 மணி தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்ற இந்தச் சிறப்புக் கலந்துரையாடல் தலைநகரில் அமைந்துள்ள எல்.எல்.ஜி. பண்பாட்டு மேம்பாட்டு நடுவத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் இரு பிரிவுகளாக நடைபெற்றது.

முதல் அங்கத்தில் தமிழ்மொழி, பண்பாடு, தமிழ்க்கல்வி ஆகிய விடயங்களில் துறைசார் நிபுணர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்த அமர்வில் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் திரு. திருமாவளவன், இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. தமிழன்பன், விரிவுரையாளர் டாக்டர் குமரவேலு ஆகியோர் தத்தம் கருத்துகளை முன்வைத்தனர்.

கலந்துரையாடலின் இரண்டாம் அங்கத்தில் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, பண்பாடு ஆகிய கூறுகளில் நடப்பு நிலையும் இலக்கும் என்ற அடிப்படையில் பேராசிரியர் முனைவர் ந. கண்ணன், பொருளியல் நிபுணர் திரு. கோவின், சைவ நற்பனிக் கழகத்தின் தலைவர் முனைவர் ந. தர்மலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் அறவாரியத்தின் உறுப்பினர்கள் உட்பட பல இயக்கத் தலைவர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்து பயன்பெற்றனர்.