ஆசிரியர்கள் நாவலத்தீவு என்ற இந்தியாவின் பழந்தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தனர் என்பது வரலாறு. எனினும் இக்காலத்தில் “சமயம்” காரணமாக சிலர் மறுக்கத்தொடங்கியுள்ளனர்

நீண்டக்காலமாக நம் தமிழ்மொழி என்பது மறையுண்டு, புதையுண்டு கிடந்துள்ளது. சென்ற நூற்றாண்டில் ஓர் அறை நூற்றாண்டுகள் திருநெல்வேலியில் தங்கி “திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம்” எனும் இலக்கண நூலை இயற்றினார்.

ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மொழி ஆய்வாளர் கால்வெல்டு பண்டைத்தமிழ் நூல்களின்றி “வடிவியல்” ஆய்வுகளை நடத்தினார். மொழி ஆராய்ச்சிக்கு “கொடியியல்” ஆய்வில் கால்டுவெல்டு நுழையவில்லை. மொழி ஆராய்ச்சி இரண்டு வகை. கொடிவழி (Genealogical) வடிவியல் (Morphological) . தமிழன் மேநாட்டிலிருந்து வந்தவன் என்ற தவறான ஓர் அடிப்படைக் கொள்கையை அவர் மேற்கொண்டதினால் பல கொடியியல் கிடைக்காமல் ஆரியம்தான் உயர் நாகரிகம் என்று சொல்லிவிட்டார். மேலும், கொற்கையிலே தான் தமிழ், தமிழர் நாகரிகம் தோன்றியது என தவறாக எழுதிவிட்டார். அவருக்குத் தொல்காப்பியம் கிடைக்கவில்லை, அவ்வாறு இருந்தும் தமிழ் மொழிதான் ஆரியத்துக்கு முந்தியது என மிகத்தெளிவாக பல இடங்களில் சொல்லியுள்ளார். இதற்குக் காரணம் தமிழ்மொழியின் சொல் தொகுதியில் மூவிடப் பெயர்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். அவற்றில் சுட்டுச் சொற்களை எடுத்துக்கொண்டார். இதனைக்கொண்டு ஆகியவற்றிக்கு மூலம் தமிழ் தான் சிலர் இதை சரியாகப்படிக்கவில்லை என்கிறார், “மொழி ஞாயிறு”.