தமிழ் அறவாரியம், தமிழ்ப்பள்ளியையும் தமிழ்க்கல்வியையும் மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஒர் அரசு சார்பற்ற இயக்கமாகும். 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் கால மாற்றக்களுக்கு ஏற்ப தற்போது பல உரு மாற்றுத் திட்டங்களைச் செய்து வருகின்றது. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமாகவும் இது கருதப்படுகிறது. காரணம் தற்போது மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 வது ஆண்டை எட்டியுள்ளது. இந்நோக்கில் “தலைமுறை கடந்த தமிழ்க்கல்வி“ எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அறவாரியம் பல்வேறு நடவடிக்கைகள மேற்கொண்டது.

மேலும் மலேசிய கல்வி முறை 21-ஆம் நூற்றாண்டு கல்வி முறையை நோக்கிச் செல்கிறது. இதனூடே 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலுக்குத் துணைநிற்கும் வகையில் தமிழ் அறவாரியம் இப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இத்தகையப் பண்புகள் இருப்பதைImage result for tamil school students உறுதி செய்து வருகிறது. இதற்கு அடிப்படையாகத் தலைமைத்துவப் பண்பும் நிபுணத்துவமும் இருக்க வேண்டுமென்பதை உணர்ந்து தற்போது மனித மூலதனம் சார்ந்த பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. அவற்றில் (IMPAK) பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம், (LPS) பள்ளி மேலாளர் வாரியம், (TEC) தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான மாணவர் தன்னாளுமைத் திட்டம் போன்றவையாகும்.

இதனைத் தொடர்ந்து மலேசியக் கல்வி பெருந்திட்டத்தில் (2013-20125) குறிப்பிடப்பட்டிருக்கின்ற பி.ஐ.பி.கே – PIBK (Penglibatan Ibubapa dan Komuniti) என்ற திட்டத்தின்கீழ் பள்ளி வளர்ச்சியில் சமூகம் பங்கு ஆற்ற வேண்டும் என்பதனை முன்கூட்டியே உணர்ந்த தமிழ் அறவாரியம் தொடக்கக் காலம் முதல் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் அடிப்படை நோக்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த மாணவர்களாக உருவாக வேண்டும் என்பதாகும். அதற்கு ஏற்ற கற்றல் சூழல் உருவாகும் மையங்களாகத் தமிழ்ப்பள்ளிகள் அமைய வேண்டும். ஆக, தமிழ்ப்பள்ளிகள் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர்களுடனும் இணைந்து இந்த நோக்கத்தை அடைய முயற்சி செய்வதே ஆகும்.

இப்படிப் பல்வேறு வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ் அறவாரியம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. இம்பாக், பள்ளி மேலாளர் வாரியம், மாணவர் தன்னாளுமைத் திட்டம் ஆகியவை தொடர் நடவடிக்கைகளாகவும் சிறப்பு நடவக்கைகளாகத் தமிழ்க்கல்வி மாநாடு, அஞ்சல் தலை வெளியீடு, விருந்து நிகழ்ச்சி, டி.எல்.பி கருத்தரங்கு, தாய்மொழி நாள் போன்ற நிகச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருமொழிப் பாடத்திட்டத்தின் அமலாக்கத்தின் விளைவாக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைத் தமிழ்மொழியில் போதிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விளக்கக் கையேட்டையும் அதனையொட்டி ஆய்வு ஒன்றயும் நடத்தி வருகின்றது.

இவ்வாறு பல்வேறு நடவடிக்களைகளையும் மேற்கொண்டு வரும் தமிழ் அறவாரியம் இம்மட்டில் நின்று விடாமல் தொடர்ந்து நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் சில முக்கிய இயக்கங்களோடும் இணைந்து செயலாற்றி வருகின்றது. அவையாவன, ஜி.பி.எம் மற்றும் எல்.எல்.ஜீ போன்ற அமைப்புகளாகும். அதுமட்டுமல்லாமல் சில தமிழ்ச்  சார்ந்த அமைப்புகளோடும் தமிழ் அறவாரியம் ஒன்றிணைந்து தாய்மொழிக் கல்வியை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ் அறவாரியம் பல நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்திமுடிப்பதற்கு நிதிவுதவி வழங்கிய ஆதரவாளர்களுக்கு இவ்வேளையில் தமிழ் அறவாரியம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சில திட்டகளுக்கு  ஆதரவாளர்களாக இருந்த மலேசிய இந்தியர் பொருளாதார திட்டமிடல் பிரிவிற்கும் (SEDIC) மற்றும் MCEF  நிறுவனத்திற்கும் நன்றி உரித்தாகட்டும்.