பக்கல்      : 27 – 28 நவம்பர் 2016 ( ஞாயிறு & திங்கள் )

இடம்       : பிரிக்பீல்ஸ் ஆசியா கல்லூரி ( பிரிக்பீல்ஸ் வளாகம் )

நிகழ்வு : தமிழ் அரவாரியத்தின் தன்னாளுமை முகாம் பயிற்சிப் பட்டறை

 

தமிழ் அறவாரியம் இவ்வாண்டும் மாணவர் தன்னாளுமை முகாமை நடத்துவதற்குப் பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறையை நடத்தியது. இந்த பயிற்சிப் பட்டறையில் பட்டறிவு பெற்ற பயிற்சி ஆசிரியர்களும் புதுமுக பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்த பயிற்சிப் பட்டறை நம் நாட்டிலுள்ள சில மாநிலங்களில் தொடங்கவிருக்கும் மாணவர் தன்னாளுமை முகாமிற்கு; இந்த பயிற்சி ஆசிரியர்களை பாதுகாவலராகவும் ஆசிரியர்களாகவும் மிகவும் செம்மைப்படுத்தி அனுப்ப உறுதுணையாக இருந்தது. அது மட்டுமில்லாமல் முகாமில் மாணவர்களைச் சிறந்த முறையில் கையாளவும் சிறந்த கற்றல் கற்பித்தலை வழி நடத்தவும் பல யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன.