பகாங் மாநிலத் தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டம்

பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டம் ஒன்று பகாங், காராக் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு. இராகவன், துணைத் தலைவர் திரு நவராஜன், உதவித் தலைவர் திரு. சரவணன், செயலாளர் திரு. செல்வஜோதி மற்றும் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பரசுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்புக் கூட்டம் 7.8.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மணி 10.00க்கு தொடங்கியது. இச்சந்திப்புக் கூட்டத்திற்கு பகாங் மாநிலத்திலுள்ள 17 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களும் 12 பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களும் பங்கெடுத்தனர். இச்சந்திப்புக் கூட்டத்தில் ‘பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம்’ என்ற பயிற்சிப் பட்டறையைப் பற்றிய விளக்கமும் கலந்துரையாடல் நடைபெற்றது.

தலைமையாசிரியருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்களுக்கும் ‘பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம்’ பயிற்சிப் பட்டறையை பற்றி விளக்கினார் திரு. நவராஜன்.

திரு. செல்வஜோதி தமிழ் அறவாரியத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் விளக்கினார்.

இந்நிகழ்வு பிற்பகல் 1.00 மணியளவில் முடிவுற்றது.