மலாக்கா மாநில தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரிய அமைப்புக் கூட்டம், 14 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம்  2016 டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு இராகவன், பள்ளி மேலாளர் வாரிய திட்ட இயக்குனர் திரு கணேஸ்வரன் மற்றும் தமிழ் அறவாரியத்தின் செயலவை உறுப்பினர் திரு இளஞ்செழியன் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் 11 தமிழ்ப்பள்ளி வாரிய தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர். மாநில வாரிய குழு அமைப்பதின் அவசியத்தையும், சட்டத் திட்டங்களையும் பற்றி திரு கணேஸ்வரன் விளக்கினார். இக்கூட்டம் மாலை 6 மணி அளவில் இனிதே முடிவுற்றது.