தமிழ் அறவாரியம் அரசு, கட்சி ஆகியன சாரா ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும். தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் தமிழ் அறவாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜுலை 14, 1990-இல் பல நிபுணர்கள் சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவி செய்ய முன்வந்தனர். இதன்வழி பிப்ரவரி 14, 2003-இல் தமிழ் அறவாரியம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது.
தமிழ்க்கல்வி வாயிலாக மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை உய்த்துணர்ந்து நல்வாழ்வுக்கு வித்திடும் அதே வேளையில் குடும்பம், சமூகம் மற்றும் நாடு ஆகிய அனைத்திலும் நல்லிணக்கத்தையும் மேம்பாட்டையும் கொண்டு வருதல்.
மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் நிருவாகக் குழுக்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாகவும் தமிழ்ப்பள்ளிகளிடையே நல்லுறவை மேம்படுத்துவதன்; வலுப்படுத்துவதன்வழி தமிழ்க்கல்வியில் ஈடுபாடுடையவர்களின் மேம்பாட்டுக்குத் துணைநிற்றல்; அதன் நிலைத்தன்மையை ஊக்குவித்தல்.
நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அடைதல்:
- தமிழ்க்கல்வி சார்ந்த அனைத்துத் துறைகள் பற்றியப் பல்வகையான ஆய்வுகள், தகவல் சேகரித்தல் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ளல்;
- தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ்க்கல்விக்கும் புத்தாக்க முன்னோடித் திட்டங்களை விருத்தி செய்தல்;
- கல்வி சம்பந்தமான விவாதங்களில் தீவிரமாகப் பங்கேற்றலும் கல்வித்திட்டங்களை ஆதரிக்கும் கொள்கைகளை முன்வைத்தலும்; மற்றும்
- ஆழமான ஆய்வுகளுக்குப் பின் நடைமுறைக்குரிய செயல்திட்டங்களை வகுத்து அவற்றைப் பகுப்பாய்வு செய்து; அதன் அனுபவ அறிவைப் பள்ளி நிருவாகத்திற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கும் பகிர்தல்.
தமிழ்க்கல்விவழி சமூகத்தினரிடையே ஆளுமைத் திறனை வளர்ப்பதே தமிழ் அறவாரியத்தின் தலையாய நோக்கமாகும். இதனைப் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், தலைமையாசிரியர் மற்றும் துணைத் தலைமையாசிரியர் தலைமைத்துவப் பயிற்சியின் வழி சமூகத்தினரிடையே ஆளுமைத் திறனை வளர்க்கத் தமிழ் அறவாரியம் திட்டங்களைத் தீட்டியுள்ளது.
இதர அரசு சார்பற்ற அமைப்புகளிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டக்கூடிய மிக உயர் மதிப்பிலான செயல்திட்டங்கள் நம்மிடம் இருந்ததில்லை. தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த இயக்கங்களுக்கு ஓர் ஆக்ககரமான சீரியத் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத் திறன் தேவைப்பட்டது.
இதன் அடிப்படையில், 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய நாள்களில், கேமரன் மலையில் நாம் நடத்திய சீரிய சிந்தனை அமர்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- பயன்பாட்டுக்குரிய மொழியாகத் தமிழ்மொழியை ஏற்றல்.
- தேசியக் கல்வி திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளின் நிலையினை மறு உறுதி செய்து வலுவூட்டல்.
- சமூகப் பங்களிப்பினை மேம்படுத்தி எல்லா நிலைகளிலும் உள்ள சமூக இயக்கங்கள், நிறுவனங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மீது உரிமை கொண்டாடச் செய்தல்.
மேலும், தமிழ்ப்பள்ளி குழந்தைகள் உறுதிப்படுத்த வேண்டும், இந்த நோக்கங்களை 80% தேர்ச்சி விகிதம் அடைகிறது மற்றும் கல்வியறிவு விகிதம் 2017 100% அடையும்.
- பயன்பாட்டுக்குரிய மொழியாக தமிழ்மொழியை ஏற்றல்.
- தேசியக் கல்வி திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளின் நிலையினை மறு உறுதி செய்து வலுவூட்டல்.
- சமூகப் பங்களிப்பினை மேம்படுத்தி எல்லா நிலைகளிலும் உள்ள சமூக இயக்கங்கள், நிறுவனங்கள் தமிழ்ப்பள்ளிகள் மீது உரிமை கொண்டாடச் செய்தல்.