- நாங்கள் யார்
கல்வியின் வழி சமூகங்களை வலுப்படுத்து தல்
தமிழ் கல்வி மற்றும் தமிழ் கல்வியை மையமாகக் கொண்ட வலையமைப்புகளின் மூலம் சமூகங்களை நாம் வலுப்படுத்துகிறோம். ஆழமான ஆய்வும் பகுப்பாய்வும் அடிப்படையாகக் கொண்டு நடைமுறைத் திட்டங்களை உருவாக்குவதன் மூலமும், பெறப்பட்ட அறிவை பரப்புவதன் மூலமும் இது மேற்கொள்ளப்படுகிறது.
இலக்கு
மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகக் குழுக்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாகவும் தமிழ்ப்பள்ளிகளிடையே நல்லுறவை மேம்படுத்துவதன்; வலுபடுத்துவதன்வழி தமிழ்க்கல்வியில் ஈடுபாடுடையவர்களின் மேம்பாட்டுக்குத் துணைநிற்றல்; அதன் நிலைத்தன்மையை ஊக்குவித்தல்.
நோக்கு
தமிழ்க்கல்வி வாயிலாக மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை உயர்த்துணர்ந்து நல்வாழ்வுக்கு வித்திடும் அதே வேளையில் குடும்பம், சமூகம் மற்றம் நாடு ஆகிய அனைத்திலும் நல்லிணக்கத்தையும் மேம்பாட்டையும் கொண்டு வருதல்.
மலேசிய சமூகத்திற்கு 22 ஆண்டுகால சேவை.
சிலாங்கூர், கோலாலம்பூர் பகுதிகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு முதன்மையாக உதவுவதற்காகத் தொழில்முனைவர் குழுவொன்று இணைந்து ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்கியது.
சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் (Registry of Societies – ROS) முறையாகப் பதிவு செய்யப்பட்டது.
தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், கேமரன் மலையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட தமிழ் அறவாரியத்தின் மூன்று தீர்மானங்களை ஏற்று, அவற்றை நிறைவேற்றும் நோக்கில் முன்னேற வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அவை பின்வருமாறு:
- தமிழ் மொழியை ஊக்குவிக்கப்பட்ட மொழியாக ஏற்றுக்கொள்வது.
- தேசிய கல்வி அமைப்பில் தமிழ்ப்பள்ளிகளை மீண்டும் உறுதிப்படுத்தி வலுப்படுத்துவது.
- அனைத்து நிலைகளிலும் குடிமக்கள் அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்கள் மூலம் சமூகப் பங்கேற்பை அதிகரித்து, தமிழ்ப்பள்ளிகளின் உரிமையைச் சமூகமே ஏற்கச் செய்வது.
எங்கள் அடிப்படை மதிப்பீடுகள்
எங்கள் மதிப்புகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூகங்களுடன் நாம் செயல்படும் முறையை வடிவமைக்கின்றன.
சமூக வலுப்படுத்தல்
தமிழ் கல்வியை மேம்படுத்துவதில் சமூகத்தின் செயலில் பங்கு எடுக்கவும், பகிர்ந்த உரிமையை ஏற்படுத்தவும் ஊக்குவிப்பதன் மூலம், சமூகங்களை நாம் வலுப்படுத்துகிறோம்.
ஒற்றுமையும் கூட்டுறவும்
தமிழ்ப்பள்ளி பங்கேற்பாளர்களான மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (PIBG),பள்ளி வாரியங்கள் (LPS) ஆகியோருக்கு இடையே வலுவான கூட்டுறவை உருவாக்குகிறோம்.
ஆராய்ச்சி மூலம் சிறந்த தரம்
ஆதாரப்பட்ட ஆராய்ச்சி, புதுமை, நடைமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்களின் வழி தமிழ்க்கல்வியை மேம்படுத்துகிறோம்.
வெளிப்படை
ஒவ்வொரு தொடர்பிலும் நம்பிக்கையை உருவாக்க, திறந்த கருத்து பரிமாற்றைத்தையும் நேர்மையான அறிக்கையிடலை நாம் பின்பற்றுகிறோம்.
- எங்கள் செயல்முறை
ஆராய்ச்சியின் வழி தாக்கம்
தமிழ்ப்பள்ளிகளையும் மாணவர்களையும் நீடித்த தாக்கத்துடன் வலுப்படுத்தும் நடைமுறை திட்டங்களை வழங்க நாம் தேவைகளை ஆராந்து சமூகங்களுடன் இணைந்து திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்
- புரிந்து கொள்வது – ஆராய்ச்சியும் மதிப்பீடும்
- ஒன்றிணைவு – பங்கேற்பாளர்கள் ஈடுபாடும் கூட்டுறவும்
- வழங்குதல் – திட்ட வடிவமைப்பும் செயலாக்கமும்
நிர்வாக அமைப்பு
உயர்ந்த நோக்கத்தை முன்னெடுத்து செல்ல துடிப்பாகச் செயல்படும் நிபுணர்கள், சமூக தலைவர்களின் தலைமையில்.
திரு மனோகரன் மாரிமுத்து
தலைவர்
திரு. மனோகரன் மாரிமுத்து அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் சட்டத்துறையில் அனுபவம் கொண்ட ஒரு வழக்கறிஞரும் சட்ட ஆலோசகரும் ஆவார். இவர் தற்போது மலேசியத் தமிழ் அறவாரியத்தின் 7-ஆவது தலைவராகவும், மலேசியத் முத்தமிழ் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், மனித உரிமைகள் மற்றும் தமிழ்க் கல்வி முயற்சிகளில் பங்களித்து வருகிறார்.
பொறிஞர் மதன்ராஜ் கங்காதரன்
துணைத் தலைவர்
பொறிஞர் மதன்ராஜ் கங்காதரன் அவர்கள் ஒரு பெருமைக்குரிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர். தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்திய சமூகத்தின் அடையாளத்தைத் தாண்டி, தமிழ்ச் சமூகத்தின் சக்திவாய்ந்த மையங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளார்.
திரு குகணேஸ்வரன் தமிழ்மணி
செயலாளர்
குகனேஸ்வரன் தமிழ்மணி அவர்கள் மலேசியத் தமிழ் அறவாரியத்தின் செயலாளராகவும், இளைஞர் தலைமையில் சிறப்பாகத் திகழும் ஒருவராகவும் உள்ளார். அவர் நெகிரி செம்பிலான் மாநில முதன்மை சாரணர் இயக்க ஆணையர் என்ற சிறப்புப் பதவியை வகித்து தனது விரிவான அனுபவத்தை பயன்படுத்தி குணநலன் வளர்ச்சியையும் குடிமைப் பொறுப்புணர்வையும் மேம்படுத்தி வருகிறார்.
முனைவர் கலைமணி காத்தன்
பொருளாளர்
முனைவர் கலைமணி அவர்கள் Mercu Jitu Engineering Sdn. Bhd. நிறுவனத்தின் திட்ட இயக்குநராகவும், தற்போது மலேசியத் தமிழ் அறவாரியத்தின் பொருளாளராகவும் பணியாற்றி வருகிறார். தனது தலைமையாற்றல் மற்றும் அமைப்பு திறன்களைச் சமூக மற்றும் கல்வி முயற்சிகளில் வழங்கி வருகிறார்.
தீர்வின் ஒரு பகுதியாக இருங்கள்.
நீங்கள் ஒரு கல்வியாளர், நன்கொடையாளர் அல்லது தன்னார்வலர் எதுவாக இருந்தாலும், எங்கள் இயக்கத்தில் உங்களுக்கான இடம் உள்ளது.