இம்பாக் 2026

2026 ஆம் ஆண்டில், இத்திட்டம் நாடு முழுவதும் 50 மையங்களில் செயல்பட்டு, சுமார் 1,500 பெற்றோர்களை சென்றடைந்து, பெற்றோர் ஈடுபாட்டை வலுப்படுத்துவதும் மாணவர்களின் கல்வி விளைவுகளை மேம்படுத்துவதும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கங்களையும் முக்கிய அம்சங்களையும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ள, பிப்ரவரி மாதத்தில் செய்தியாளர் சந்திப்புடன் இது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும்.
உலகத் தாய்மொழி நாள் 2026

இவ்வாண்டிற்கான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் பிப்ரவரி 12, லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம் (LLG) நடைபெறவிருக்கிறது. அதனை தொடர்ந்து, இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சி கோலாலம்பூர் சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபத்தில் பிப்ரவரி 28-ஆம் நாள் நடைபெறவுள்ளது.