மாணவர் தன்னாளுமை முகாம்
இது ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான கடுமையான 21-நாட்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் கற்றல் முகாம் ஆகும். இம்முகாம் மலாய், ஆங்கில தேர்வுகளில் C தரத்திற்குக் கீழ் மதிப்பெண்களைப் பெற்றவர்களும் B40 மாணவர்களுக்கும் மலாய் மற்றும் ஆங்கில திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாணவர்கள் ஒத்துழைப்பு மற்றும் தலைமைத்துவத்திறனையும் கற்றுக்கொள்ளமுடியும். மேலும், இந்த 21 நாட்களில் மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் மலாய்மொழியில் பேச வலியுறுத்தப்படுவர். இம்முகாமின் இறுதியில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பீடு மூலம் அவர்களின் முன்னேற்ற நிலையைக் கண்டறிய முடியும்.