தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு

மலேசியத் தமிழ் அறவாரியம் தமிழ்க்கல்வி குறித்த மாநாடுகளை இதற்கு முன்னர் இரண்டு முறை (2016 & 2018) வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு 21 டிசம்பர் 2024 அன்று ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நோக்கம்

  • மலேசியாவில் தமிழ்க் கல்வியில் ஏற்படும் முக்கிய சவால்களையும் வாய்ப்புகளையும் கண்டறிதல்.
  • தமிழ்க்கல்வியின் தர மேம்பாட்டிற்கான புதிய அணுகுமுறைகளை ஆராய்தல்.
  • தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் அதை தக்கவைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல்.
  • எஸ்.பி.எம் தேர்வு தமிழ்மொழி, இலக்கியப் பாடமும் எஸ்.தி.பி.எம் தேர்வுத் தமிழ்ப்பாடமும் போதிப்பதில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளை முன்மொழிதல்.
  • இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கியப் பாடத்தை ஊக்குவித்தல்.

தகவல்க-
ளைத் தவறவி-
டாதீர்கள்

சமீபத்திய ஆய்வு சுருக்கங்கள், நிகழ்ச்சி அழைப்புகள் போன்றவை நேரடியாக உங்களுக்குக் கிடைக்க, எங்கள் சமூகச் செய்திமடலில் இணையுங்கள்.